MALARCHI 1 Day Workshop for Staff
'விருதாசலத்துலேருந்து வர்றேன். என் பாஸ் அனுப்சாரு இந்த கோர்ஸுக்கு. அடுத்த சில வருஷத்துக்கான வேலை பாக்கற முறை, பார்வை கெடச்சுட்டுது. மாசாமாசம் இங்க கிளாஸுக்கு வர்ற மாதிரி தொடர்புல இருக்கற மாதிரி எதுவும் வழி இருக்கா சார்?'
'நெய்வேலியிலேருந்து வர்றேன். நெறைய அள்ளிட்டுப் போறேன். சரியான நேரத்துல சரியான புரிதலை தந்தது 'சிங்கப் பாதை''
'ஐ டேக் கேர் ஆஃப் அட்மின் அண்ட் அதர் திங்க்ஸ். யூ ட்யூப்ல வீடியோல்லாம் அடிக்கடி பாத்துருக்கேன். பட், இப்படி எனர்ஜியா இவ்வளோ சூப்பரா இருக்கும்னு நெனக்கல. இது வேற லெவல்!'
'அதே கடை, அதே வேலைதான். ஆனா, இப்ப அத வேற மாதிரி பாக்க முடியுது!'
'முக்கியமான முடிவு ஒண்ணு எடுத்துட்டேன் சார்!'
'ஐ ஆம் எ டீம் லீடர். மலர்ச்சியோட பல வருஷமா இணைந்து பயணிக்கறேன். ஆனாலும், இந்த கோர்ஸ்ல எல்லாமே புதுசு, ரொம்ப டீப்பு, வேற லெவல். வேற லெவல் பரமன பார்த்தேன். என் ப்ரொஃப்ஷனல் கரீயருக்கு நிறைய அள்ளிட்டுப் போறேன்!'
'நான் சில ஸ்கூல்கள் நடத்தறேன். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இருக்காங்க நம்ம கிட்ட. அவ்வளோ தூரம் பயணிச்சு வந்தது, முழுநாள் பரமனோட இருக்கலாம், எனர்ஜிய அள்ளிட்டு போகலாம்னுதான்! மலர்ச்சியில எது நடந்தாலும் வந்துடனும்! அவ்வளோ கிடைக்கும்!'
'சிங்கப் பாதை Work Excellence' - 1 நாள் மலர்ச்சி பயிலரங்கில் நேற்று (20.07.2024) பங்குபெற்றோர் சிலரின் பகிர்வுகள் இவை.
பணி புரியும் ஊழியர்களை மனதில் வைத்து அவர்கள் திறன் மேம்பாடு, கவனம் குவித்தல், வேலையில் நேர்த்தி அதன் வழியே செயல்பாடுகள் மேம்பாடு, உற்பத்தித் திறன் கூட்டல் ஆகியவற்றுக்கான மலர்ச்சி பயிலரங்காக வடிவமைக்கப்பட்டது 'சிங்கப் பாதை'.
விருத்தாசலம், நெய்வேலி, காஞ்சிபுரம், காரைக்குடி, சென்னை, கடலூர் என பல ஊர்களிலுமிருந்து கட்டுமானத்துறை, பள்ளி, வன்பொருள் வணிகம், ஹைப்பர்மார்ட், துணி ஆயத்த ஆடை வணிகம், நகை வணிகம், நிதி நிறுவனம், மென்பொருள் உற்பத்தி என பல்துறையிலிருந்தும் ஊழியர்கள் பதிவு செய்து குவிந்ததில் அரங்கம் நிறைந்தது. ('பதிவு செய்ய முயற்சிக்க வேண்டாம். அரங்கு நிறைந்தது!' என்று குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டேயிருக்கும் படியான நிலை முந்தைய நாள் மாலை!)
'மலர்ச்சியில் பல ஆண்டுகளாகப் பயணிக்கிறேன். இதுதான் 'சிங்கப் பாதை'தான் இதுவரையில் நான் பார்த்ததிலேயே சிறந்தது. நல்ல வேளை, நான் வந்தேன்!' என்று கூப்பிட்டு சொன்னார் மலரவர் கஜலட்சுமி.
வந்திருந்த அத்தனை பேரும் திங்களன்று பணிக்குப் போகும் போது 1% கூடுதல் உற்சாகத்தோடும், கொஞ்சம் தெளிவான பார்வையோடும், தான் வகிக்கும் பணியின் பொறுப்பை உணர்ந்தும் போவார்கள். இது நடக்கும். இது 'சிங்கப் பாதை'யின் வெற்றி. அவர்கள் தொடர்ந்து செயல்புரிந்து சிறக்க இறைவன் துணை செய்யட்டும்!
ஒரு நாள் முழுக்க உற்சாகம், நேரியம் கொப்பளிக்கும் 8 மணி நேரம், மனிதர்கள்.. மனிதர்கள்... அவர்களது மனதினுள்ளே சில விதைகள்... நிறைவாக உணர்கிறேன்.
'சிங்கப் பாதை Work Excellence' - சிலிப்பு, சீரிய வளர்ச்சி!
-பரமன் பச்சைமுத்து
சென்னை
21.07.2024
Comments