Arumbugal
'Arumbugal'
MALARCHI Course for Children
@Puducherry
மழைக்காலத்தில் விழித்த பின்னும்
எழ விரும்பாமல் போர்வைக்குள் சுணங்கிக் கிடக்கும் சில மலைப்பிரதேசத்து மனிதர்களைப் போல
மேகப் போர்வைக்குள் சுணங்கிக் கிடக்கிறான் கோடைச் சூரியன் புதுச்சேரியில்!
காலையே மாலையைப் போல், சூடில்லாமல் சுகமாய்!
வணக்கம் புதுச்சேரி!
குழந்தைமை... எடை போடல், பயன்படுத்தக் கணக்கீடு, உறவிலிருந்து ஊழியம் ஈட்ட. விழைதல், உள்ளொன்று புறமொன்று என எதுவும் இல்லா உன்னத நிலை. குழந்தைகளிடம் நாம் பேண வேண்டிய முக்கிய குணம் குழந்தைமைதான்!
புதுச்சேரியிலும், சென்னையிலும் நடைபெறும் இளம்பிள்ளைகளுக்கான 'அரும்புகள்' 'மொட்டுகள்' மலர்ச்சி வகுப்புகளில் இளம் உள்ளங்களோடு உறவாடி நல்லதை விதைத்து மகிழும் பேறினை வழங்கியுள்ளான் இறைவன்.
மகிழ்ச்சி!
-பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி
08.05.2024
Comments